மனித வர்க்கம் எதிர்நோக்கும் சவால்களை அடிப்படையாகக் கொண்டு உயிரியலின் இயற்கை நிலையும் முக்கியத்துவமும்.
உயிரியல் / Biology
உயிர் அங்கிகளை மையமாகக் கொண்டு கற்கும் விஞ்ஞானம் ஆகும்.
( Bios- உயிர் | Logos – கற்றல் )
உயிர் / Life
· உயிர் என்பதை வரைவிலக்கணப்படுத்தல் இலேசான ஒரு கருமமன்று. இதுவரை விஞ்ஞானிகளால் உயிருக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வரைவிலக்கணம் ஒன்று வழங்கப்படவில்லை.
· உயிர் என்பது இ பௌதிகவியல் மற்றும் இரசாயனவியல் விதிகளைக்கொண்டு விளக்கப்பட முடியாத தனித்துவமிக்க சிறப்பானதொன்றாகும்.
· உயிரியலானது சிக்கற்தன்மையான பாரியதொன்றாகும். எனவே கற்பதற்கு வசதிக்காக மூன்று முதலான கிளைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1. விலங்கியல் / Zoology – விலங்குகளைப் பற்றி கற்றல்
2. தாவரவியல் / Botany – தாவரங்களைப் பற்றி கற்றல்
3. நுண்ணுயிரியல் / Microbiology – நுண்ணுயிர்களைப் பற்றி கற்றல்
· இத்துறைகளில் பின்வரும் பகுதிகள் உள்ளடக்கப்படலாம்
1. குழிய உயிரியல் / Cell Biology – கலங்களைப் பற்றி கற்றல்
2. இழையவியல் / Histology – இழையங்களைப் பற்றி கற்றல்
3. உடலமைப்பியல் / Anatomy – உடலின் மொத்தக் கட்டமைப்பு பற்றி கற்றல்
4. உடற்றொழிலியல் / Physiology – உடற்றொழிலியல் பற்றி கற்றல்
5. உயிரிரசாயனவியல் / Biochemistry – உயிரியல் மூலக்கூறுகளைப் பற்றி கற்றல்
6. பிறப்புரிமையியல் / Genetics – பாரம்பரியம் பற்றி கற்றல்
7. சூழலியல் / Ecology – சுற்றாடலைப் பற்றி கற்றல்
0 Reviews: