இம் முறை உயர் தர பரீட்சையின் சில பாடங்களுக்கு சாதாரண கணக்கீட்டு கருவியினை (calculator) கொண்டு செல்வது குறித்து இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய உயர் தர மாணவர்கள் கணக்கியல், பயோ சிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் போன்று மேலும் சில பாடங்களுக்கு கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெறும்.
இதேவேளை இலங்கை கணக்காளர்கள் சேவை போட்டி பரீட்சைக்கும் சாதாரண கணக்கீட்டு கருவியினை இவ்வருடம் முதல் கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்குதவாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Comments